அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் மம்முட்டி, திலீப், குஞ்சாக்கோ போபன் மற்றும் உன்னிமுகுந்தன் ஆகிய நான்கு பேரின் படங்கள் ரிலீஸாகின. ஆனால் இவற்றில் குஞ்சாக்கோ போபன் நடித்த 'மதுர நாரங்கா' படம் மட்டும் தான் ஓரளவு வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மம்முட்டியின் 'அச்சா தின்' அட்டர் பிளாப் ஆனது. திலீப்பின் 'லவ் 24x7' படமும் உன்னி முகுந்தனின் 'கே.எல்-10' படமும் ஆவரேஜுக்கும் கீழே தான்.
இந்த நிலையில் ஆகஸ்ட்-20ல் ஓணம் ரிலீஸாக அடுத்த செட் பெரிய படங்கள் ரிலீஸாக தயாராகி வருகின்றன.. அதனால் ரம்ஜான் ரிலீஸ் படங்கள் தியேட்டரில் காற்றாடும் இந்த சாதமான சூழ்நிலையை பயன்படுத்தி, மலையாளத்தில் ஐந்து படங்கள் வரும் வெள்ளிகிழமையன்று ரிலீஸ் ரேஸில் குதிக்கின்றன.. அவற்றை பற்றிய ஒரு சின்ன முன்னோட்டத்தை இங்கே பார்த்துவிடலாம்
ஆயாள் ஞானல்ல
இந்த வருடம் வெளியான மரியம் முக்கு, ஹரம் ஆகிய படங்களின் தோல்விக்குப்பின் பஹத்பாசில் நடிப்பில் வெளியாகும் படம். இதில் கிடைக்கும் வெற்றிதான் பஹத் பாசிலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதில் பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.. நடிகராக இருந்த வினீத்குமார் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மிருதுளா முரளி..
ருத்ர சிம்ஹாசனம்
வில்லனாக நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஐ' படத்தை தொடர்ந்து சுரேஷ்கோபி மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சிபு கங்காதரன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக 'ஹேமாவதி தம்புராட்டி'யாக மாறியிருக்கிறார் நம்ம 'டார்லிங்' நிக்கி கல்ராணி. இன்னொரு தம்புரட்டியாக ஸ்வேதா மேனன் நடித்துள்ளார். சுரேஷ்கோபியின் வித்தியாசமான கெட்டப்பே படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏபடுத்தியுள்ளது.
ஜிலேபி
புதுமுக இயக்குனர் அருண் சேகர் என்பவர் இயக்கத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். கடந்த 2013ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தில் ஏற்கனவே ஒருமுறை இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை டாக்ஸி
ஹீரோ, இயக்குனர் என அனைவரும் புதுமுகங்களே.. பாசில் பஷீர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாட்ஷா என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 23 வருடங்களுக்கு முன் பாசில் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'பாப்பேயுடே ஸ்வந்தம் அப்பூஸ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
விஸ்வாசம் அதல்லே எல்லாம்
கடந்த வருடம் வெளியான 'இதிகாசா' படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் கிடைத்த புகழைவிட, இந்த வருடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி அதன்மூலம் கிடைத்த எதிர்மறையான பப்ளிசிட்டியால் பேமஸான மலையாள நடிகர் டாம் சாக்கோ நடிப்பில் வெளியாகும் படம்.. அவருக்கு மறுவாழ்வு தரும் என எதிர்பார்க்கப்படும் இந்தப்படத்தை ஜெயராஜ் விஜயன் என்பவர் இயக்கியுள்ளார்.. த்ரிஷயம் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த அன்ஷிபா ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப்படங்களில் ஏதாவது ஒன்றிரண்டு படங்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ஜகா வாங்கவும் வாய்ப்பு உண்டு.. இவற்றில் வெற்றிமாலை சூடப்போவது யார் யார் என்பது அடுத்து வாரம் தெரிந்துவிடும்.