அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
விஷயம் தெரிந்தபோது மலையாள சினிமா முக்கிய புள்ளிகள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது... மலையாளத்தில் சின்னசின்ன ரோல்களில் சாதாரணமாக நடித்து வந்த ஒரு காமெடி நடிகரான சசி கலிங்கா என்பவர், ஹாலிவுட் படம் ஒன்றில் சத்தமில்லாமல் நடித்துவிட்டு வந்துள்ளார் என்பது கூட ஒரு சின்ன அதிர்ச்சியைத்தான் கொடுத்தது, ஆனால் இந்தப்படத்தில் நடிப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார்கள் தற்போது சம்பளமாக வாங்கும் தொகையை விட அதிகமான தொகையை இவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளார்கள் என்பதை கேள்விப்பட்டு அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறைதான்.
2009ல் மம்முட்டி நடித்த 'பாலேறி மாணிக்கம்' படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ரஞ்சித். அதன்பின் சிறிதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 30 படங்கள் வரை நடித்துவிட்ட சசி கலிங்கா, காமெடி, குணச்சித்திரம், சில நேரங்களில் சைடு வில்லன் வேடத்தில் கூட நடித்துவிட்டார். இப்போது நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் டைட்டில் என்ன, அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார்கள் என்பதைப்பற்றி துளிகூட வாய்திறக்க மறுக்கிறார் சசி கலிங்கா. காரணம் ஹாலிவுட் பட கம்பெனியினரின் அக்ரிமெண்ட் அப்படி..
ஆனால் தான் நடித்தது, இந்தியாவில் உள்ள அனைத்து ஹாலிவுட் பட ரசிகர்களுக்கும் தெரிந்த ஹாலிவுட் நடிகர்களுடன் தான் என்பதை மட்டும் சூசகமாக சொல்லியிருக்கிறார் சசி கலிங்கா.. இரண்டு வருடங்களுக்கு முன் இயக்குனர் கமல் டைரக்சனில் 'கடம்மா' என்கிற படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தபோது ஏதேச்சையாக அங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் இவரை ஒரு நபர் சந்தித்து பேசினாராம்.. அப்போது யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற அளவில் அவருடன் பேசிவிட்டு வந்த சசி கலிங்கா, பின்னாளில் அவரால் தான் இந்த ஹாலிவுட் பட வாய்ப்பே கிடைக்கப்போகிறது என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இலையாம்.
இந்தப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்க முதல் காரணம் இவரது தோற்றமும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் விதமும் தானாம். கரணம் அந்தப்படம் பைபிள் சம்பந்தப்பட்ட சில கேரக்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம். ஹாலிவுட் படத்தில் நடித்தது, அதிக சம்பளம் வாங்கியது இவற்றை எல்லாம் விட சசியை பிரமிப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் இவர் தங்கி இருந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் இருந்து, இவரை ஹெலிகாப்டரில் பிக்கப் பண்ணி, தினசரி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச்சென்று வந்தது தானாம். சசி கலிங்கா உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்.