அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
டோலிவுட்டில் ரே, பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த நடிகர் சாய் தரன் தேஜ் தற்போது இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் சுப்ரமணியம் பார் சேல் படத்தில் நடிக்கின்றார். எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தாயரிக்கும் இப்படத்தில் சாய் தரன் தேஜிற்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்கின்றார். இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பின்னர் சாய் தரன் டோலிவுட்டில் பட்டாஸ் எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் கல்யாண் ராம் மற்றும் நடிகை ஸ்ருதி சோதி நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் டோலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்து. அப்படத்தின் இயக்குநர் அணில் ரவிபுடி கூறிய கதை நடிகர் சாய் தரன் தேஜிற்கு பிடித்துப் போனதால் அதில் நடிக்க சாய் தரன் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.தயாரிப்பாளர் ராஜு இத்தகவலை உறுதி செய்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.