அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
ஷங்கரின் ஐ படம் சீனாவில் படமாக்கப்பட்டது. தற்போது துணிந்தவன் என்ற சிறு பட்ஜெட் படம் ஒன்றும் சீனாவில் படமாக இருக்கிறது. தேஜ், மடால்ஷா நடிக்கும் இந்தப் படத்தை அஜீத் என்ற புதுமுகம் தயாரிக்கிறார், குங்பூ மாஸ்டர் ராஜநாயகம், சூரி, டெல்லி கணேஷ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.
"படிப்பதற்காக சீனா செல்லும் ஹீரோ அங்கு சட்டவிரோதமாக செயல்படும் ஒரு போதை கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பிப்பதோடு அந்த கும்பலை போலீசிடம் மாட்டிவிடுகிறார். அதன் பிறகு சென்னை வந்து விடுகிறார். சீனாவில் இவர் பிடித்துக் கொடுத்த போதை கடத்தல் கும்பல் சென்னைவரை நெட் ஒர்க் வைத்திருக்கிறது. சென்னையில் உள்ள தனது நெட்ஒர்க் மூலம் ஹீரோவை அழிக்க நினைக்கிறது. அதனை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பது கதை. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் சீனா சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாள் ரோஹித் திலீப் செய்து வருகிறார். என்கிறார் இயக்குனர் அஜீத்.