ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படமும், சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படமும், வசூலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன. இவ்விரு படங்களின் வெற்றிக்கு பின்னாலும், ரஜினி எடுத்த முடிவுதான், அவருக்கு பின்னடைவாக அமைந்தது என்று சொன்னால், அது நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.....
மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தை, தமிழிலும் எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், இயக்குநர் ஜீத்து ஜோசப் முதலில், ரஜினியைத் தான் அணுகினாராம். கிளைமாக்ஸை எனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி.
அதேபோல், சல்மான் கான் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி பெற்றுள்ள பஜ்ரங்கி பைஜான் படத்திலும், முதலில் ரஜினிதான் நடிப்பதாக இருந்தது. ரஜினி லிங்கா படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, பஜ்ரங்கி பைஜான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றதால், ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க முடியாது என்பதால், பஜ்ரங்கி பைஜான் பட வாய்ப்பை, ரஜினி நிராகரித்துவிட்டார்.
"லிங்கா" படத்தால், ரஜினிக்கு எந்தளவிற்கு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை... தான் நிராகரித்த இரு படங்களும், பெரும்வெற்றி பெற்றுள்ளதை தற்போது உணர்ந்துள்ள ரஜினி, வழக்கமான இயக்குநர்களுக்கு இந்தமுறை வாய்ப்பளிக்காமல் புதுமுயற்சியாக, இளம் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்திலான படத்தில் இப்போது கால்ஷீ்ட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




