பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட 76 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதேபோன்று 2007,2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதைத்தொடர்ந்து, கலைமாமணி மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி பேசினார். மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், பாரதி விருதை எழுத்தாளர் ஜெயகாந்தனும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை இசையமைப்பாளர் இளையராஜாவும், பாலசரசுவதி விருதுதை பரத நாட்டிய கலைஞர் பத்மாசுப்ரமணியமும் பெற்றுக் கொண்டனர். 2008ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர் கருணாஸ், ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குனர் திருமுருகன் உள்பட 27 பேருக்கும், 2009ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த், குணச்சித்திர நடிகைகள் ரோகிணி, சரண்யா, நடிகைகள் மாளவிகா, ரேவதி சங்கரன், நாட்டுப்புற பாடகி தஞ்சை சின்னப்பொன்னு உள்பட 23 பேருக்கும் வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர். விருது பெற்ற அனைவரையும் முதல்வர் கருணாநிதி பாராட்டி பேசினார்.