மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் |
கேரள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவின் ஹீரோயினாக வந்தவர் ஸ்ருதிராஜ், ராமகிருஷ்ணா, ஜெர்ரி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதனால் கேரளாவுக்கே திரும்பிச் சென்று விடாமல் சின்னத்திரை நடிகையானர். இன்று சின்னத்திரை நடிகைகளில் முதல் 5 இடத்துக்குள் இருக்கிறார் ஸ்ருதி.
தென்றல் சீரியல்தான் ஸ்ருதிக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. 5 ஆண்டுகள் தென்றல் தொடரில் நடித்தார். அது முடிந்ததும் கேரளாவிலேயே செட்டிலாகி மலையாள சீரியல்களில் நடிப்பது என்றுதான் முடிவு செய்திருந்தார். ஆனால் தென்றல் படப்பிடிப்புகள் முடிந்த மறு மாதமே அவருக்கு அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் தன் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார்.