பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
நடிகர் விமல், தனது உறவினரும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பசங்க படத்தி்ன் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். மணப்பாறையை சேர்ந்த விமல் பசங்க படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த களவாணி படமும் சூப்பர் ஹிட். தற்போது எத்தன் படத்தில் நடித்து வரும் விமல், தனது தந்தை வழி உறவினரான அட்சயா என்ற பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா சென்னையில் உள்ள தனியார் மரு்ததுவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு அட்சயாவின் வீட்டில் எதிர்ப்பு வந்தது. டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் அட்சயாவை திருமணம் செய்து வைப்போம் என கூறிய பெற்றோர், அதற்காக டாக்டர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என எண்ணிய காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தற்போது கும்பகோணத்தில் எத்தன் படப்பிடிப்பில் இருக்கும் விமலை சந்திப்பதற்காக மாணவி அட்சயா கும்பகோணம் சென்றார். பின்னர் இருவரும் சுவாமிமலை சென்றனர். அங்கு முருகன் கோயிலில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு விமலின் மனைவியாக மாணவி அட்சயா சென்னை சென்று விட்டார். நடிகர் விமல் கும்பகோணத்தில் தங்கியிருந்து சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
ரகசிய திருமணம் குறி்தது நடிகர் விமல் அளித்துள்ள பேட்டியில், அட்சயா எனக்கு மாமா மகள் முறைதான். சிறு வயதில் இருந்தே இருவரும் நட்பாக பழகினோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் எங்கள் காதலை அட்சயாவின் வீட்டில் எதிர்த்தனர். அவளை ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கொடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். சினிமாவில் நான் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் முன்னணி நடிகராக வருவேன். உங்கள் மகளை நல்லபடியாக வைத்து காப்பாற்றுவேன் என்று மாமனார் குடும்பத்தினருடன் போராடினேன். ஆனால் அவர்கள் ``சினிமாக்காரனுக்கு எங்கள் பெண்ணை கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டார்கள். அதோடு நிற்காமல், பிரியதர்சினிக்கு மிக தீவிரமாக டாக்டர் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்கள். எனவேதான் நாங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேர் குடும்பத்து பெரியவர்கள் சம்மதத்துடன், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.