கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை என்று உத்தமவில்லன் படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
கமலஹாசனின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். உத்தமவில்லன் படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. உத்தமவில்லன் தமிழ் படத்தின் இசை, சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் கமலஹாசன், படத்தின் கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஸ்ரீராம், தெலுங்கு பட விநியோகஸ்தர் கல்யாண், கமல் மகள் சுருதி ஹாசன், கவுதமி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது, கமலஹாசனின் 120 படங்களுக்கு தெலுங்கில் நான் டப்பிங் செய்து உள்ளேன். கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை. அவரிடமும், இயக்குனர் பாலச்சந்தரிடமும் கற்று தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. கமலும், நானும் வேறு அல்ல. என்னை அண்ணா என்று அழைக்கும் மனம் ஒன்றிய நண்பர்களில் அவரும் ஒருவர். நானும் அவரை தம்பி என்றே அழைக்கிறேன். இப்போது உத்தமவில்லன் படத்தில் நடித்ததன் மூலம் பாலசந்தருடன் ஒரு சில நாட்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று. கமலஹாசன் சாகர சங்கமம், சுவாதி முத்யம் படத்துக்கு பிறகு தெலுங்கில் நடிக்கவில்லை. இந்த உத்தமவில்லன் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இவ்வாறு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசினார்.