தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு | பிளாஷ்பேக்: வில்லன் வேடத்தால் சினிமாவை விட்டு விலகிய கராத்தே மணி | பிளாஷ்பேக் : 75 வருடங்களுக்கு முன்பே 'டைம் டிராவல்' | தனுஷ், விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது | அண்ணன் சூர்யாவிற்கு வழிவிடும் தம்பி கார்த்தி | ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிக்கும் இம்மார்டல் | பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் |
அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தபோது நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் பலர். அவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருந்தார், எப்படி ஆட்சி செய்தார், எப்படி உயிர் நீத்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது, ஆனால் அதை நம் கண்முன் நிறுத்தியவர் நடிகர் சிவாஜி கணேசன். பி.ஆர்.பந்தலு தயாரிப்பு, இயக்கத்தில், 1959ம் ஆண்டு, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, வரலெட்சுமி, வி.கே.ராமசாமி ஆகியோரது நடிப்பில் வௌிவந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன். சரித்திரத்தை கண்முன் நிறுத்திய இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில், சமீபகாலமாக பழைய படங்களை டிஜிட்டல் செய்து வௌியிடுவது அதிகமாகியுள்ளது. அந்தவகையில், சிவாஜியின் கர்ணன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் வௌியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் சிவகுமார், வைரமுத்து, நடிகர்கள் ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று டிரைலரை வௌியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, தமிழ் சினிமாவின் அடையாளம் சிவாஜி. வீரபாண்டிய கட்டபொம்மன் சரித்திர படம் மட்டுமல்ல, நம் வரலாற்றை சொல்லும் படமும் கூட. இப்படத்தில் சிவாஜியின் குரலே தனித்தன்மையாக இருந்தது. இன்றைக்கு நம் நாட்டில் அந்நிய முதலீடு கொஞ்சம் கொஞ்சம் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசும், இந்திய அரசும் ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்ள வேண்டும். அன்று வௌ்ளைக்காரர்களும் இப்படி தான் உள்ளே வந்தார்கள் என்றார்.
நடிகர் சிவக்குமார் பேசும்போது, சிவாஜியுடன் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். கந்தன் கருணை படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டேன். சிவாஜிக்கு மகனாக சில படங்களில் நடித்துள்ளேன், அவரது மகனாக நடித்தது பெருமை என்றார்.
பிரபுபேசுகையில், பள்ளி குழந்தைகள் எல்லோருக்கும் இப்படத்தை திரையிட்டு காட்ட வேண்டும், அப்படியொரு அருமையான படம் இது என்றார்.