பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
பாலாஜி மோகன் இயக்கதில், தனுஷ் நடித்து வரும் படம் மாரி. இதில் காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ரோபோ சங்கர், காளி வெங்கட் காமெடியன்கள், பாடகர் யேசுதாஸ் மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்த ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் அனிருத் ஒரு பாடலுக்கு தனுசுடன் ஆடியுள்ளார். அவரே பாடிய மார்க்கெட் குத்து பாடலுக்கு தனுசுடன் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் வெளிவருகிறது.