பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
தேசிய விருது கலைஞர்
ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். தொடர்ந்து ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், உதயன், 180, காஞ்சனா, ஆரோகணம், பரதேசி, எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார். இதில் ஆடுகளம் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். வெற்றிமாறன் இயக்கும், விசாரணை படத்தில் பணியாற்றி வந்தார்.
மூளையில் அடைப்பு
இந்நிலையில் கடந்த(பிப்., 27ம் தேதி, வௌ்ளிக்கிழமை) விசாரணை படத்தில் பணியாற்றி வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் கிஷோர். இதனையடுத்து அவரை உடனடியாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார் இயக்குநர் வெற்றிமாறன். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆபரேஷன் மூலம் அது சரிசெய்யப்பட்டது.
கோமா நிலை
ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து ஒருவார காலமாக கோமா நிலையிலேயே ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்டிருந்தார். கிஷோரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இனி பிழைக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர். சரி இங்கு தான் சிகிச்சை செய்ய வழியில்லை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வௌிநாடுகளில் சிகிச்சை அளிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று உறவினர்கள் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள பிரபல மருத்துவமனைகளையும் அணுகியுள்ளனர். ஆனால் அவர்களும் சிகிச்சை அளித்தாலும் எந்த பலனில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
மூளைச்சாவு
இந்நிலையில் ஒருவார காலமாக கோமா நிலையில் இருந்த கிஷோருக்கு இன்று(மார்ச் 6ம் தேதி) மூளைச்சாவு ஏற்பட்டது. மூளைச்சாவு ஏற்பட்டாலும் தொடர்ந்து அவர் ஐசியு.வில் வைக்கப்பட்டுள்ளார்.
உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த கிஷோரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து கிஷோரின் தந்தை தியாகராஜன் நம்மிடம் கூறியதாவது, எனது சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள வளவனூர். எனக்கு மூன்று வாரிசுகள். இரண்டு பெண், ஒரு ஆண். நான் ஊரில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தேன். கிஷோர் தான் எங்களது குடும்பத்தின் ஆணி வேர். அவன் தான் தனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தான். எஸ்.எஸ்.எல்.சி படித்து விட்டு சினிமா துறையின் மீது ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தான். அகத்தியன், லெனின், விஜயன் உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றினான். பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று உயர்ந்த நிலைக்கு வந்துள்ளான்.
ஏழைகளுக்கு தானம்
எனது மகனின் உடல் உறுப்புகளை ஏழைகளுக்கும், அநாதையாக இருப்பவர்களுக்கும் மட்டுமே தானம் செய்வேன். கண்டிப்பாக இதை யாரும் வியாபாரமாக்க வேண்டாம் என்று டாக்டர்களிடம் கேட்டு கொண்டிருக்கிறேன். உடல் உறுப்பு தானத்தால், இந்த மண்ணில் எனது மகன் வாழ்ந்து கொண்டிருப்பான் என அவரது தந்தை தியாகராஜன் கண் கலங்கிய படி கூறியது நம்மை மட்டுமல்ல அங்கிருந்தவர்களையும் உருக வைத்தது.
இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே பாதிப்பு
இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே கிஷோருக்கு இந்த பாதிப்பு இருந்துள்ளது. அடிக்கடி தலைவலி, கை மரத்து போனது போன்றதொரு உணர்வு போன்ற அறிகுறிகள் தெரிந்துள்ளன. ஆனால் கிஷோர் அதை பொருட்படுத்தவில்லை. மேலும் வேலை வேலை என்று சரியாக உணவு எடுத்து கொள்ளாததும், தூக்கமின்மையும் இந்த பிரச்னைக்கு ஒரு காரணம் என்றும், ஓராண்டுக்கு முன்னர் கூட கிஷோர் சிகிச்சை எடுத்திருந்தால் நிச்சயம் அவர் பிழைத்திருப்பார் என்று அவரது உறவினர்கள் கூறினர்.
சனியன்று உடல்உறுப்புகள் தானம்
கிஷோரின் உடல் உறுப்புகளை நாளை(மார்ச் 7ம் தேதி) ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைத்து அவரது பிரித்து எடுக்க உள்ளனர். அவரது இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள், கிஷோரின் தந்தை கூறியபடி ஏழைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
கிஷோரின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது எடிட்டிங் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான வளவனூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.