நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இசை அமைத்து வருகிறார். ப்ரியமுடன் ப்ரியா அவரின் 100 வது படமாகும், இதற்கிடையில் தற்போது ராபர்ட் இயக்கும் எம் ஜி ஆர் படத்தின் இசை அமைப்பாளர் இவர் தான். தற்போது ஸ்ரீ ஸ்டுடியோஸ் என்ற ஆடியோ கம்பெனி நிறுவனத்தை தொடக்கி இருக்கார் , ராபர்ட் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி இருபவரும் ஸ்ரீ தான். இது பற்றி ஸ்ரீகாந்த் இடம் கேட்டபோது, அப்பா இது வரை 700 படங்களுக்கு மேல் இசை அமைத்து இருக்கார்.ரஜினி,விஜய் அஜீத் என்று பல பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு எல்லாம் அப்பா தான் இசை. அவர் செய்யாத இந்த கம்பெனி நான் துவங்க பல காரணம் இருக்கு.
இப்போது ஆடியோ ரிலிஸ் என்றால் ,ஒரு படத்தின் ஆடியோ விற்க பெரும் பாடாக இருக்கிறது , பெரிய நடிகர்கள் படத்தை உடனே வாங்குபவர்கள் சிறிய படங்களுக்கு , உதவி செய்வதில்லை , இதற்கே பல நாட்கள் ஆகிறது . பல இசை அமைப்பாளர்களும் இந்த சங்கடத்தை அனுபவிகின்றனர். சொல்லபோனால் முன்பை விட இப்போது பாடல் கேட்பவர்களும் , டௌன் லோடு செய்பவர்களும் அதிகம் இருக்கின்றனர் , ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாவதே தவிர குறையவில்லை , அப்படி இருக்கும் நிலையில் எப்படி ஆடியோ விற்காமல் போகும் , இதனால் பாதிக்கப்படுவது இயக்குநர்களும் இசை அமைபாளர்களும் தான் , அதனால் நான் தொடங்கிய ஸ்ரீ ஸ்டுடியோவில் எல்லா இசை அமைப்பாளர்களின் படங்களின் ஆடியோவையும் வாங்கி வெளியிட உள்ளேன். சினிமா மட்டுமே, இசை மட்டுமே தெரிந்த நான் ஏதேனும் சினிமாவுக்கு பயன் உள்ளதாக செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தின் முதல் படி தான் ஸ்ரீ ஸ்டுடியோ , இன்னும் பல ஐடியா இருக்கு என்று சொல்லும் ஸ்ரீ கைவசம் அச்சாரம் உட்பட 10 படங்கள் கைவசம் வந்துள்ளாராம்.
பெரிய இசை அமைப்பாளர் சின்ன இசை அமைப்பாளர் என்று இல்லாமல் நல்ல இசையை தரும் அனைத்து இசை அமைப்பாளர்களின் ஆடியோவையும் வாங்கி, வெளியிட்டு உதவுவேன் என்று ஆணி தரமாக சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.