முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் |
மணிரத்னம் படங்களில் மேனேஜராக பணியாற்றிய நஸீரினின், ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் உருவாகும் புதிய படம் களவானி. டைரக்டர் சற்குணம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :
* குடும்பப்பாங்காக உருவாகியிருக்கும் களவானி படத்திற்கு சென்சார் போர்டு "யு" சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது.
* கும்பகோணம், மன்னார்குடி, ஒரத்தநாடு மற்றும் தஞ்சை வட்டார பகுதிகளில் இதுவரை இல்லாத லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
* முதல் முறையாக களவானி படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே சேர்த்துள்ளனர். மற்ற அனைத்தும் துண்டு பாடல்கள்.
* களவானி படத்தின் இணை இயக்குனர் திருமுருகன் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார்.
* பசங்க படத்தில் இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு யாரு? என்ற டயலாக் மூலம் பிரபலமான விமல் களவானியின் நாயகனாக நடிக்கிறார்.
* படத்தின் நாயகி ஓவியாவின் நிஜப்பெயர் ஹெலன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது பெயரை ஓவியா என மாற்றியவர் டைரக்டர் சற்குணம்.
* தெலுங்கில் கிருஷ்ணவம்சி, தமிழில் நாணயம் படத்தை அடுத்து இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
* படத்தின் தயாரிப்பாளர் நஸீர் மணிரத்னத்திடம் அலைபாயுதே படம் முதல் குரு படம் வரை மேனேஜராக பணியாற்றியிருக்கிறார்.
* டைரக்டர்கள் கலைமணி, விஜய் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன் களவானி படத்தை இயக்குகிறார் டைரக்டர் சற்குணம்.
* பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் தொடர் வெற்றிகளைத் தந்த எடிட்டர் ராஜாமுகமது களவானிக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
* களவாணி படக்காட்சிகளில் காமெடி பகுதியில் கலக்கியிருக்கும் கஞ்சா கருப்பு, இந்த படம் தனக்கு பெரிய பேரைத் தரும் என்ற நம்பிக்கையோடு கூடுதலாக சில நாட்கள் நடித்து கொடுத்திருக்கிறார்.
- தினமலர் சினி டீம் -