ரெட்ரோ 4 நாள் தமிழக வசூல் இத்தனை கோடியா? | ஜனநாயகன் படத்தில் குத்தாட்டம் போடுவது யார்? | இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ் | பாட புத்தகத்தில் சோழ பேரரசின் வரலாற்றை மறைப்பது ஏன்? மாதவன் கேள்வி | 13 ஆண்டுகளுக்குபின் சந்தானம் பட விழாவில் சிம்பு | கிராமத்து நடிகை பெருமாயி காலமானார் | ஜனநாயகனுக்காக 6 கிலோ மீட்டர் மலையில் நடந்த விஜய் | பிளாஷ்பேக்: முதல் கானா பாடல் | நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார் | பிளாஷ்பேக்: கடைசி வரை கவர்ச்சியாக நடிக்காத சுஜாதா |
நயன்தாராவுடன் காதல் முறிவுக்கு பின்னர் சற்று சோர்ந்து இருந்த சிம்பு, அடுத்தடுத்து படங்களை ஆர்வமாக தொடங்கினாலும், ஏதோ சில காரணங்களால் தொய்வு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில்தான் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு வெற்றி பெற்றது. தனது அலட்டல் இல்லாத அசத்தலான நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்லாமல், திரையுலகை சேர்ந்த பலரையும் கவர்ந்திருக்கிறார் சிம்பு. இதனால் சிலபல இயக்குனர்கள் சிம்புவிடம் கதை சொல்ல காத்துக்கிடக்கும் சூழ்நிலையும் உருவாகி விட்டது.
இதற்கிடையில் டைரக்டர் லிங்குசாமி இயக்கவுள்ள புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். பையா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடி வெற்றியடைந்துள்ளதால், லிங்குசாமியின் அடுத்த படைப்பும் பிரமாண்டமானதாக இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். படத்தில் சிம்பு தவிர இன்னொரு நாயகனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக தமன்னாவை சிபாரிசு செய்திருக்கிறாராம் சிம்பு. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற கொள்கையுடைய தமன்னா, கேட்ட தொகையை கொடுத்தால் சிம்புவுடன் ஜோடி சேர மறுப்பாரா என்ன?