படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
ஆர்யாவும், ஹன்சிகாவும் இணைந்து நடிக்கும் மீகாமன் படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு பாடல்களும் ஒரு தீம் பாடலும் இருக்கிறது. இரண்டு பாடல்களில் ஒன்று மதன் கார்க்கி எழுதியுள்ள மூட் சாங். அதாவது காமத்தின் வலியை ஹன்சிகா, ஆர்யாவை மனதில் நினைத்து பாடுவதாக அந்த பாடல் அமைந்துள்ளது. "என் மனதிற்குள் நீ வந்தாய் இன்ப வலிகளை தந்தாய்" இப்படி போகும் அந்த பாட்டில் ஹன்சிகாவும், ஆர்யாவும் மிகவும் நெருக்கமாக நடித்தாக கூறப்படுகிறது.
"எனக்குன்னு தமிழ்நாட்டில் ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது. அதை இந்த பாட்டு கெடுத்திடும்" என்று சொல்லி கதறி அழுதிருக்கிறார் ஹன்சிகா. இந்த தகவலை சொன்னது படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனிதான்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனை சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: பாடல் எடுத்து முடித்த பிறகு ஹன்சிகா கண்ணீர்விட்டு அழுதார். எனக்கு தமிழ்நாட்டுல ஒரு இமேஜ் இருக்கு அதை இந்த பாட்டு அபெக்ட் பண்ணிடும்னு வருத்தப்பட்டார். அவருக்கு இந்த மேடையின் மூலமா ஒரு உறுதியை சொல்லிக்கிறேன். எந்த விதத்திலும் உங்கள் இமேஜை இந்த பாட்டு பாதிக்காது. எடிட் செய்யப்பட்டு எல்லோரும் பார்க்கும்படியான தரமான பாடலாக இது இருக்கும்" என்றார்.
இதுபற்றி ஆர்யா கூறும்போது: ஹன்சிகா இதுக்கு முன்னாடி இத்தனை நெருக்கமா நடிச்சதில்லை. அதான் கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டார். இன்னும் எடிட்டிங், மிக்சிங்குன்னு நிறைய வேலை இருக்கு அது முடிந்த பிறகு பாட்டை பார்த்தார்னா ரொம்k சந்தோஷப்படுவார் என்றார்.