தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு கே.எஸ்.ஜி வெங்கடேஷ் நல்ல அறிமுகமானவர். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன். அவர் இயக்கிய அத்தைமடி மெத்தையடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர். போதிய வாய்ப்புகள் இன்றி சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் சதுரங்க வேட்டை படத்தில் கிரானைட் அதிபராக நடித்திருந்தார். அவரது நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். வாய்ப்புகளும் வருகிறது. அதனால் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்பாதான் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் 25 படங்கள் வரை நடித்தேன். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்து விட்டேன். 20 சீரியல்களுக்கு மேல் சுமார் 2 ஆயிரத்து 500 எபிசோட்களில் நடித்திருக்கிறேன்.
சதுரங்க வேட்டை வாய்ப்பு கிடைத்தது. ஒரு படம்தானே என்று ஒரு மாறுதலுக்காக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லன் கேரக்டர்கள் அதிகமாக வருகிறது. வில்லனாக நடிப்பதில் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை, நடிக்க தயார் என்கிறார் வெங்கடேஷ்.