மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரஜினி முருகன். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உள்ளூர் வெள்ளை வேட்டி பார்ட்டியாகவும் நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. குடிதண்ணீர் பிடிக்கும் இடத்திலிருந்து சினிமா தியேட்டர் கவுண்டர் வரைக்கும் யாரிடமும் சண்டைக்கு நிற்கும் வாயாடி பெண் கேரக்டர். சுமாரான அழகு கொண்ட லோக்கல் பெண் கேரக்டர். எதற்கெடுத்தாலும் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு திரிகிற கேரக்டர். கெட்ட வார்த்தைகளை சரளமாக அள்ளிவிடுகிற பெண். இந்த கேரக்டரில் நடிக்க ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஜிகிர்தண்டாவில் சேலை திருடும் பெண்ணாக நடிதிருந்த லட்சுமிமேனனைப் பார்த்துவிட்டு அவரையே ஹீரோயினாக முடிவு செய்து விட்டார்கள்.
இதற்கு லட்சுமிமேனனும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. இதில் சிவாகர்த்திகேயன், சூரி, லட்சுமிமேனன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். லட்சுமிமேனன் சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் படம் இது.