மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வரும் லிங்கா படப்பிடிப்புகள் மைசூரில் தொடங்கியது. அங்கு பிரமாண்ட அணைகட்டு செட், மற்றும் 1947க்கு முந்தைய ஒரு நகரத்தின் செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. ரஜினி சோனாக்ஷி நடித்த காட்சிகள் படமானது. அதற்கு பிறகு ஐதராபாத்தில் ரெயில் செட்போட்டு படமாக்கப்பட்டது. இதில் அனுஷ்கா கலந்து கொண்டார். ரஜினி வில்லன்களோடு மோதும் சண்டை காட்சிகள் படமானது.
தற்போது லிங்கா படப்பிடிப்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 3ம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. இதில் டாக்கி போர்ஷன் எனப்படும் வசன காட்சிகள் படமாக்கப்படுகிறது. இவை அனைத்தும் இண்டோர் சீன் (உள் அரங்க காட்சிகள்) என்பதால் ரகசிய இடத்தில் இதற்கான செட் போடப்பட்டுள்ளது. அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இறுதி கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸ். இது கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமகோவில் நடக்கிறது. இங்கு பிரமாண்ட அணைக்கட்டும், மிகப்பெரிய சிவன் சிலையும் உள்ளது. இங்கு கிளைமாக்சை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
படப்பிடிப்புகள் முடிந்ததும் தீபாவளி அன்று படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி லிங்காவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுதான் லிங்காவின் இப்போதைய ஷெட்யூல்.