மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மும்பையில் உள்ள தனது வீட்டில் ஹாயாக ஓய்வெடுத்த சோனாக்ஷி சின்கா, தற்போது இடைவீடாத டூரில் இருக்கிறார். இது பாலிவுட்டில் பல கிசுகிசுக்களை பரவ செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது புதிய படங்களை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள், போட்டோ ஷூட்டுக்கள், டிவி விளம்பர படங்கள் என ஏகத்துக்கும் பிஸியாக இருக்கிறார் சோனாக்ஷி. பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகை தொடர்ந்து ஓய்வு எடுத்ததற்கு காரணம் என்ன?இப்போது தொடர் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதற்கு காரணம் என்ன? என்பது குறித்து சோனாக்ஷியின் நெருங்கிய வட்டாரத்திடம் கேட்ட போது, ஏ.ஆர்.முருகதாசின் துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை பிரபலப்படுத்துவதற்காகவே தொடர்ந்து பயணம் செய்கிறார். ஹனி சிங்குடனான பாடல் காட்சிக்காக லாஸ் ஏஞ்சல்சிற்கும் செல்ல உள்ளார். அது மட்டுமின்றி தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடக்கும் லிங்கா படத்தின் தமிழ் டப்பிங் பேசும் வேலைகளிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இது போக சில நடன காட்சிகளில் நடிப்பதற்காக புனேவிற்கும், பின்னர் அனுரஜ் கபூருடனான இந்தி படத்திற்காக டில்லிக்கும் செல்ல உள்ளார். கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்னும் சில நாட்களில் அவர் லண்டனிற்கும் செல்ல உள்ளார். இந்த பணிகள் முடிந்த பிறகு, மைசூருக்கு திரும்பி லிங்கா பட சூட்டிங்கை தொடர உள்ளார். அதை முடித்து விட்டு பிரபு தேவா உடனான படத்திற்காக மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார் என்று மட்டுமே கூறப்படுகிறது. இப்படி வீடு திரும்பாமல் தொடர்ந்து அவர் பயணம் செய்தற்கான காரணம் மட்டும் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.