மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் அஞ்சான் திரைப்படம் சிக்கந்தர் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த தெலுங்குப் படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பல ரசிகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். விழா மேடையில் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில்தான் உரையாற்றினார். நடிகை சமந்தாவும் தெலுங்கில்தான் பேசினார், சூர்யா மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். சூர்யாவை விட சமந்தா மேடைக்கு வந்த போது கைதட்டல்கள் அதிகமாகவே ஒலித்தது.
மேடைக்கு வந்த சமந்தா பேசிய போது, “இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான படம். இந்தப் படத்துல நடிக்கும் போது சூர்யா என்னை தெலுங்குலதான் பேசச் சொல்வாரு. இதுவரைக்கும் யாரும் என்னை அப்படி செய்யச் சொன்னதில்லை. தெலுங்கு மொழியை சூர்யா ரொம்பவே நேசிக்கிறாரு. இந்த படத்துக்காக இயக்குனர் லிங்குசாமி தனி கவனம் செலுத்தினாரு. ஒவ்வொரு ஷாட் ஷுட்டிங் முடிந்ததும், இந்த டயலாக் தெலுங்குல எப்படி இருந்ததுன்னு என்கிட்ட கேட்பாரு, ” என்றார்.
இப்படியெல்லாம் பேசினால்தானே தெலுங்குலயும் படத்தை ஓட்ட முடியும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?. லிங்குசாமி பேசும் போது சூர்யாவைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருந்ததால் ரசிகர்கள், சமந்தா..சமந்தா...என கத்த ஆரம்பித்தனர். முதலில் கிங் பற்றி பேசிவிட்டுத்தானே குயின் பற்றி பேச முடியும் என்றார் லிங்குசாமி. பின்னர் சமந்தாவைப் பற்றியும் பேசினார்.
சூர்யாவோட அடுத்த பட கால்ஷீட், லிங்குசாமிக்கு இப்பவே கிடைச்சிடும் போல....!