மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார் வினோத். சமீபத்தில் ரிலீசான படம் மிகுந்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் வினோத்திற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சதுரங்க வேட்டை படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படத்தை பார்த்து வியந்த லிங்குசாமி. உங்களின் அடுத்த படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என்று சொல்லியிருந்தார். அதன்படி வினோத்தின் அடுத்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தமாகி உள்ளது.
இதுகுறித்து வினோத் கூறியதாவது: எங்க பேனர்ல அடுத்த படம் பண்ணுங்கன்னு லிங்குசாமி சார் கூறியிருந்தார். அதன்படி திருப்பதி பிரதர்ஸ்சுக்கு அடுத்த படத்தை இயக்குகிறேன். இது சதுரங்க வேட்டையிலிருந்து முற்றிலும் மாறுட்டதாக இருக்கும். ஒரு பவர் புல் மேட்டரை மையமாக கொண்டு உருவாகும். டீ கடையில்கூட பேச யோசிக்கிற ஒரு மேட்டரை சினிமாவில் பேச இருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் இந்த மேட்டர் கன்னி வெடியில் கால் வைக்கிற மாதிரி இருக்கும். ஆனா அது கன்னி வெடியில்லைன்னு சொல்ற படமாகவும் இருக்கும். வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மக்களுக்கு நான்கு நல்ல விஷயத்தை சொல்ற படமாகவும் அது இருக்கும். என்கிறார் வினோத்.