மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
கடந்த 2 வாரங்களில் நடந்த சினிமா நிகழ்ச்சிகளில் சமந்தா முக்கிய புள்ளியாக இருந்தார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் இவர் நடித்த அஞ்சான் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு படைப்பான சிகந்தர் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அஞ்சான் படத்தின் ஆடியோ ரிலீசில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், சிகந்தர் ஆடியோ ரிலீஸ் விழாவில் குடும்பபாங்கான கெட்டப்பில் வந்து கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனது மற்றொரு தெலுங்கு படமான ரபாசா பட ஆடியோ ரிலீசிலும் முக்கிய புள்ளியாக சமந்தா தான் கலந்து கொண்டார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடித்து வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான அல்லுடு சீனு படம் சூப்பர் கிட்டாக ஓடிக்கொண்டுள்ளது. படங்கள் மட்டுமின்றி ஐதராபாத்தில் பல இடங்களிலும் சமந்தா நடித்த சேலை விளம்பர போஸ்டர்கள் தான் காட்சி அளிக்கின்றன. இதனால் தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாக சமந்தா, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இது பற்றி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த சமந்தா, நீங்கள் என்னை விரும்பினாலும் சரி, வெறுத்தாலும் சரி என்னை உங்களால் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளார். தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் நாயகியாக வலம் வரும் சமந்தா, அவ்வப்போது சென்னை வந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் பாடல் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார்.