மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
ஆர்யா சினிமாவில் அறிமுகமானபோது சில படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகத்தான் நடிக்க விரும்பினார். ஆனால், அறிந்தும் அறியாமலும், பட்டியல், வட்டாரம் என சில படங்களில ஆக்சனில் இறங்கினார். அந்த படம் ஹிட்டடித்து வந்தநிலையில், நான் கடவுள் படத்தில் அவரை நடிக்க வைத்த பாலா ஆர்யாவின் கெட்டப்பை மாற்றி விட்டார்.
அதனால் அதையடுத்து ஆக்சன் மட்டுமின்றி பர்பாமென்ஸ் கதைகளையும் தேடினார் ஆர்யா. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சனில் இருந்து விலகி ஒரு கட்டத்தில் ரொமான்ஸ் வித் காமெடி கதைகளில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆனால் இப்போது மீகாமன், புறம்போக்கு, யட்சன் ஆகிய படங்களில் மீண்டும் முழு ஆக்சன் ஹீரோவாக மாறி நிற்கிறார்.
இனிமேல் இதே ரூட்டில்தான் ஆர்யாவின் சினிமா பயணம் செல்லுமாம். அதனால, பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருக்கும் ஆர்யா, முதல் பாகத்தில் நயன்தாரா பின்னால் சுற்றியவர் இரண்டாம் பாகத்தில் ஆக்சன் ரூட்டில் பயணிக்கப்போகிறாராம். அதன்காரணமாக, அப்படத்தின் கதையை ஏற்கனவே மீண்டும் காமெடியாக பண்ணி வைத்திருந்த டைரக்டர் எம்.ராஜேஷ் இப்போது ஆக்சன் டிராக்கையும் கதைக்குள் திணித்துக்கொண்டிருக்கிறாராம்.