மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
பெரும்பாலும் முன்னணி ஹீரோ-ஹீரோயின்கள் மற்ற நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதிக நெருக்கமான நட்பு வட்டார நடிகர்களோ, இயக்குனர்களோ கேட்டுக்கொண்டால்தான் நடித்துக்கொடுப்பார்கள். அதுவும் உடனே பிடி கொடுக்க மாட்டார்கள். பல மாதங்களாக அவர்களை துரத்திப்பிடிக்க வேண்டும். ஆனால், சூர்யாவோ தெலுங்குப்பட இயக்குநரான ராஜமவுலியின் இயக்கத்தில் ஒரு காட்சியில் நடிக்க சான்ஸ் கிடைத்தாலும் அதை பெருமையாக கருதுவேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில்தான் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபாலி என்ற படத்தை இதுவரை இநதியாவில் தயாரிக்கப்படாத மெகா பட்ஜெட்டில் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
அவரது டைரக்ஷனில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா? என்று பல நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருககிறார்கள். ஆனால், முன்பு ஒருமுறை அவர் என்னை நடிக்க அழைத்தபோது நான் மறுத்து விட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். அதனால் இப்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பாகுபாலி படத்தில் ஒரு காட்சியில் என்னை நடிக்க சொன்னாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.