மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்-லட்சுமிமேனன் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் புதுமுக இயக்குனராக நடித்துள்ள சித்தார்த், தனது முதல் படத்தை நிஜ ரவுடி கதையைத்தான் படமாக்குவேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கு செல்கிறார். காரணம் அதுதான் ரவுடிகள் ஏரியாவாம்.
அங்கு சென்று சேது என்றொரு லேட்டஸ்ட் ரவுடி பற்றிய செய்திகளை சேகரித்துக்கொண்டிருக்கும்போது அது அவருக்கு தெரிய வருகிறது. விளைவு அந்த ரவுடியையே நாயகனாக வைத்த படம் இயக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார் சித்தார்த். நேற்று முன்தினம் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அப்படக்குழு சார்பில் சினிமா உலகின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பித்து வருகின்றனர். அப்படி நேற்று சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் காவியத்தலைவன் படத்தை இயக்கியுள்ள வசந்தபாலன், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் ஜிகர்தண்டா படத்தை பார்த்துள்ளனர்.
ஆனால், படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது, அவர்களிடம் படத்தைப்பற்றி கருத்து கேட்டுள்ளனர். ஆனால் யாருமே எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார்களாம். ஒரு சம்பிரதாயத்திற்காகவாவது நல்லாயிருக்கு என்ற வார்த்தையைகூட அவர்கள் சொல்லாமல் நழுவியதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் சித்தார்த்.