மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
விஜய்யின் தலைவா படத்தில் கெளரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராகினி நந்த்வானி. தலைவா படத்தில் நடித்த பிறகு இவரை பற்றி எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில், தற்போது அச்சமுண்டு அச்சமுண்டு பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கும் பெருச்சாழி என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில், ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக ராகினி நந்த்வானி நடிக்க உள்ளார். இந்த படம் ராகினியின் நெருங்கிய வட்டத்தினர் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதை மிகச் சிறந்த அனுபவ பயணமாக ராகினி நினைக்கிறார். இது நகைச்சுவை கலந்த அரசியல் கதை. படத்தில் வரும் ஒவ்வொரு நகைச்சுவை வசனமும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். மோகன்லால் ராகினிக்கு நல்ல சப்போட்டிவாக இருந்து வருகிறார். ராகினி மறந்து விட்ட வசனங்களை அவருக்கு எடுத்துக் கொடுத்து பெரிதும் உதவி செய்கிறார்.ராகினி இந்தி பேசும் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு மலையாளம் பேசுவது கஷ்டமாக உள்ளது. ஆனால் மோகன்லால் உதவி செய்து வருவதால் ராகினி இப்போது நன்றாக மலையாளம் உச்சரிக்க பழகி வருகிறார் என்றனர்.