ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
கே.பாலசநதர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகுதான், அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்பட சில படங்களில் நடித்தனர்.
பின்னர் ஒருகட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கத் தொடங்கியபோதும், கே.பாலசந்தர் இயக்கத்தில் அவ்வப்போது நடித்தவர்கள் எம்.ஜிஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருதுருவங்கள் ஆனார்கள். ஆனபோதும், தங்களது குருவான கே.பாலசந்தரை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை. அவர் எந்த விழாக்களுக்கு வந்தாலும் அவரை முன்நின்று வரவேற்பார்கள். தாங்கள் ஏதேனும் விருதுகள் பெற்றால் அதை வாங்கிக்கொணடு, முதல்வேளையாக அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தனர்.. அந்த அளவுக்கு அவர்கள் குருபக்தியுடன் உள்ளனர்.
மேலும், கே.பாலசந்தரை ரஜினி, கமல் இருவருமே அய்யா என்றே அழைக்கிறார்கள். அதேபோல் தங்களின் பிள்ளைகளை அவரை தாத்தா என்று அழைக்கும்படியே வளர்த்துள்ளனர். இதை சில நிகழ்ச்சிகளில் கூறி பெருமை கொள்ளும் பாலசந்தர், எனது மாணவர்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை என்று சொல்லி புழகாங்கிதம கொள்கிறார்.