அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி, கண்டேன் காதலை, பையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தங்கப்பதுமை தமன்னா ரசிகர் மன்றம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த ரசிகர் மன்றம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் பையா படம் ரீலிஸ் ஆன தியேட்டரில் தமன்னாவுக்கு 50 அடி உயர கட்-அவுட் வைத்த ரசிகர்கள், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து அசத்தியுள்ளனர்.
இதுபற்றி கேள்விப்பட்ட தமன்னா, தனது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தூத்துக்குடியில் எனது பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பது பற்றி என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. என் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ததாக கேள்விப்பட்டேன். கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளுக்கு இணையாக இதுபோல் பால் அபிஷேகம் செய்யும் காரியங்களை நான் எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன், என்று கூறியுள்ளார்.
ஹீரோ, ஹீரோயின்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம், நடிகைகளுக்கு கோயில் என ரசிகர்கள் தங்களது பாசத்தை காலம் காலமாக காட்டி வந்தாலும் அதனை பெரும்பாலான நட்சத்திரங்கள் கண்டித்ததில்லை. ஆனால், இதுபோன்ற காரியங்கள் தவறு, அதனை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்று தமன்னா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது.