'2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தவர் பவன். அதையடுத்து சில படங்களில் நெகடீவ் ரோல்களில் நடித்த அவர், சமீபத்தில் அருள்நிதி நடித்த தகராறு படத்தில் இன்னொரு ஹீரோ மாதிரியான வேடத்தில் நடித்திருந்தார். ஆக, அதையடுத்து அவருக்கு ஹீரோ வாய்ப்பே இப்போது கிடைத்து விட்டது. விலாசம் என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோவாகியிருக்கிறார் பவன்.
இதுபற்றி பவன் கூறுகையில், இந்த படத்தில் ஹீரோ என்றாலும், வில்லத்தனமான கதையில்தான் நடித்திருக்கிறேன். அதோடு, எனக்கு கதாநாயகனாக ஆசையெல்லாம் இல்லை.எப்போதுமே நான் கதையின் நாயகன்தான்.அதோடு, இந்த படத்தில் ஹீரோ ஆகிவிட்டேன் என்பதற்காக தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதும் இல்லை. நல்ல வில்லன் வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். மொத்தத்தில் ஒரு நடிகனாக இருப்பேன் என்கிறார்.
மேலும், இந்த விலாசம் படத்தில் பவனுக்கு ஜோடியாக சனம் நடித்துள்ளார். அவரைபற்றி கூறுகையில், சனம் நல்ல கலர். அதனால் அவர் நிறைய மேக்கப் போட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர் ஓவராகத்தான் மேக்கப்போடுகிறார். ஒரு பாடல் காட்சியில் அவருடன் ஆடியபோது அவர் உடம்பெல்லாம் போட்ட மேக்கப் எல்லாமே என சட்டையில ஒட்டி, என் டிரஸ்செல்லாம் சாயம் பூசின மாதிரி ஆயிடுச்சு. அந்த பாட்டுல உன்னிப்பாக கவனிச்சா அது தெரியும் என்று சொன்ன பவன், மேக்கப்புலதான் ஓவர் என்றாலும், பர்பாமென்ஸ் விசயத்தில் ரொம்ப சரியாக செய்தார் சனம். அதனால் எனது முதல் ஹீரோ பட நாயகியே ஒரு நல்ல திறமையான நடிகை என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே என்றார் பவன்.