டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
பெங்களூரைச் சேர்ந்தவர் பவன். 2002ம் ஆண்டு பாலா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஹீரோவாகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவருக்கு கிடைத்தது எல்லாம் வில்லன் கேரக்டர்தான். இங்கிலீஸ்காரன், திமிரு, கலாபகாதலன், பொல்லாதவன், குருவி, செங்காத்து பூமியிலே, தகராறு, வீரம் உள்பட பல படங்களில் வில்லனாவும், வில்லனுக்கு அடியாளாகவும் நடித்தார்.
இப்போது முதன் முறையாக விலாசம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். அவருக்கு ஜோடியாக ஷனம் ஷெட்டி நடிக்கிறார். சுந்தர்.சியின் உதவியாளர் ராஜகணேசன் இயக்கி உள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விலாசம் தொலைத்த ஒருவன், தன் விலாசத்தை தேடி அலைகிற கதையாம். இந்த படத்துக்கு பிறகு பவன் ஹீரோ விலாசத்தை தக்க வைத்துக் கொள்வாரா என்பது படம் ரிலீசான பிறகு தெரிய வரும்.