ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
பூபதிபாண்டியன் இயக்கத்தில், விஷால் ஹீரோவாக நடித்த பட்டத்துயானை படத்தில் தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக களம் இறக்கினார் அர்ஜுன். பட்டத்துயானை படத்தின் படுதோல்வி காரணமாகவோ என்னவோ, ஐஸ்வர்யாவுக்கு எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து படவாய்ப்புகள் வரவில்லை. தமிழில்தானே இப்படி? எனவே மற்ற மொழிகளில் முயற்சி செய்து பார்க்கலாம்..! என்று கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் தன் மகளுக்கு வாய்ப்பு தேடும் படலத்தை ஆரம்பித்தார் அர்ஜுன். அதாவது தனக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் ரகசியமாக வாய்ப்பு தேடினார். அங்கும் பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸ் வரவில்லை.
பட்டத்துயானை படத்தின் ரிசல்ட் மட்டுமல்ல, அந்தப் படத்தின் தோல்விக்கே அர்ஜுனின் மகள்தான் காரணம் என்பதுபோல் கோடம்பாக்கத்தில் சிலர் அடித்த கமெண்ட்டுகளினால் ஐஸ்வர்யாவை பிற மொழிகளிலும் கதாநாயகியாக வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால் கடும் அப்ஸெட்டானார் ஐஸ்வர்யா. மகளின் மனதை தேற்றி, தற்போது தான் இயக்கிவரும் ஜெய்ஹிந்த் - 2 படத்தில் ஐஸ்வர்யாவை இணை தயாரிப்பாளராக்கிவிட்டார் அர்ஜுன். படத்தயாரிப்பில் அவருக்கு பயிற்சி கொடுத்து, தன் படநிறுவனத்தையே ஐஸ்வர்யாவிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறாராம் அர்ஜுன். அதுமட்டுமல்ல, டைரக்ஷனிலும் மகளுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.