ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்ட மணி நடிக்கும் படம். அதுவும் ஹீரோவாக நடிக்கும் படம் 49ஓ. நேற்று இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படத்தை கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் டைரக்ட் செய்கிறார். கவுண்டமணி இதில் விவசாயியாக நடிக்கிறார். அவருடன் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், திருமுருகன், சோமசுந்தரம் நடிக்கிறார்கள். கவுண்டருக்கு பொருத்தமான ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக தேவதர்ஷினி அல்லது லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கலாம் என்கிறார்கள். கே. மியூசிக், பாபு ஒளிப்பதிவு.
49ஓ என்றால் யாரையும் பிடிக்கவில்லை என்கிற ஓட்டுப்பதிவு. தேர்தல் விதிமுறையின் 49வது பகுதியில் 0 என்கிற பிரிவு. அதாவது ஓட்டுப்பதிவு எந்திரத்தின் நோட்டா பட்டன். 49ஓ என்பது படத்தின் டைட்டிலாக இருந்தாலும் இது பாலிட்டிக்ஸ் படமல்ல. இப்போதுள்ள விவசாயிகளின் பிரச்னைகளையும், கஷ்டங்களையும் காமெடியாக சொல்லும் படம்.
உதாரணத்துக்கு ஒரு சீன்... தன் நிலத்தில் விளைந்த வாழைக்காயை மார்க்கெட்டில் விற்று விட்டு பிள்ளைகளுக்கு கைநிறைய வாழக்காய் சிப்ஸ் வாங்கி வருவார் கவுண்டர். இப்படிப் போகும் படம். சென்னை புறநகரை தாண்டிய ஒரு கிராமத்தில் நேற்று படப்பிடிப்புகள் தொடங்கியது. விவசாயி கெட்-அப்பில் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
படத்தில் நடிப்பது பற்றி கவுண்டமணியிடம் கேட்டபோது, "ஏங்கண்ணு டவுனுக்குள்ள படம்புடிச்சா மைக்க தூக்கிட்டு வந்துடுறீங்கன்னு இம்புட்டு தூரம் ஒதுங்கி வந்தா துரத்திக்கிட்டு வந்திட்டீங்களே. பேட்டி கொடுக்கிறதுக்கு நானு காந்தியா, காமராசரா என்று கவுண்டரு ஹீரோ ரீ-என்ட்ரி கொடுக்குறாரு. கங்கிராட்ஸ் பண்ணிட்டு போங்க கண்ணு" என்றார். கவுண்டரின் குசும்பும், குறும்பும் இன்னும் மாறவே இல்லை.