ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
அட்டகத்தி படத்தில் இரண்டாவது, ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.விஜய சேதுபதியுடன் நடித்த அனுபவத்தை கூறுகையில், ரொம்ப சின்சியரான நடிகர் அவர். நடிப்பில், தான் மட்டுமின்றி, தன்னுடன் இணைந்து நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டுமென்று, நினைப்பார். ரம்மி படத்தில், ஒரு உணர்ச்சிகரமான காட்சியில், சரியான நடிப்பை வெளிப்படுத்த முடியாமல் நான் தவித்தபோது, அவர் தான் எந்த மாதிரி நடிக்க வேண்டுமென்று, எனக்கு டிப்ஸ் கொடுத்தார் என்கிறார். இப்படி சொல்லும் ஐஸ்வர்யாவிடம், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிக்க விஜயசேதுபதி தான் உங்களுக்கு சிபாரிசு செய்தாரா? என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. ரம்மி படத்தில் அவருடன் நடிப்பதற்கு முன்பே, பண்ணையாரும் பத்மினியும் படத்தில், நான் கமிட்டாகி விட்டேன். ஆனால், அந்த படம் ரம்மிக்கு பிறகு படமானது. சினிமாவில் சிபாரிசு செய்தெல்லாம் பெரிய நடிகையாக முடியாது என்கிறார்.