ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
கலைஞர் டி.வி.,யில் ஜவனரி 18ம்தேதி முதல் தினமும் இரவு 8 மணிக்கு விளக்கு வச்ச நேரத்திலே என்ற பெயரில் புதிய சின்னத்திரை தொடர் ஒளிபரப்பாக உள்ளது. டைரக்டர் கே.பாக்யராஜ் திரைக்கதையில் உருவாகும் இந்த தொடரை டைரக்டர் சி.ரங்கநாதன் இயக்குகிறார். பொதுவாக நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. இந்தப் பெண்ணுக்கு அடுத்து என்ன நடக்கும்? எந்த மாதிரியான சோதனையை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்பது தொடரின் மற்ற கதாபாத்திரங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் தொடரை பார்க்கிற ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தொடரின் நாயகிக்கு மட்டும் தெரியாது. இதனால் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் கூடி ஒருவித பரபரப்பு, தொடரைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இதில் சஞ்சீவ், சுஜிதா, கவுசிக், அனுராதா, கிருஷ்ண மூர்த்தி, சிவன் சீனிவாசன், சுரேஷ்வர், மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், சித்ரா லட்சுமணன், பாக்யஸ்ரீ. இளவரசன், நித்யா, கலாரஞ்சனி, ஷ்ரவன், `ஊர்வம்பு' லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி, சிவாஜி, குமரேசன், பாபுஸ், சுந்தர், மாஸ்டர் கனிஷ்கர், தனலட்சுமி ஆகியோருடன் டைரக்டர் சி.ரங்கநாதனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாடல்: வைரமுத்து. இசை: தேவா. எவர்ஸ் மைல் நிறுவனம் சார்பில் தொடரை தயாரித்து வழங்குபவர் ஈ.ராமதாஸ்.