டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
விஜய் நடித்துள்ள தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு தர முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படம் நேற்று வெளியாக வேண்டியது. ஆனால் சில பல பிரச்னைகளால் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவா படத்திற்கு யு சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசிடம் படக்குழுவினர் கேட்டிருந்தனர்.
அதன்படி படத்தை பார்த்த 7பேர் கொண்ட தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு குழுவினர், படத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். படத்தில் சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், யு சான்று பெற்றாலும், ஆங்கில கலப்பு வசனங்கள் நிறைய இருக்கிறது என்றும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும், சமுதாயத்தை திசை திருப்பும் வண்ணத்தில் விஜய்யின் வசனங்கள் இருப்பதாலும் தலைவா படம் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்றும் தேவேந்திர பூபதி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட 7பேர் கொண்ட உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறி அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே படம் ரிலீஸாவதில் சிக்கல் உள்ள நிலையில், படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருப்பது ‘தலைவா’வுக்கு மேலும் ஒரு ‘தலைவலி’யை ஏற்படுத்தியுள்ளது.