யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது |
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். இதுவரை தான் நடித்திராத மீனவன் வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். இப்படத்துக்காக நீச்சலே தெரியாத தனுஷ் ஆழ்கடல் பகுதிக்கு படகை ஓட்டிச்சென்று மீன்பிடிப்பது போல் நடித்திருக்கிறார்.
அதேபோல், தனுஷ் நடித்துள்ள இன்னொரு படம் ராஞ்சனா. காதலை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம். தனுஷின் முதல் இந்தி படம் என்பதால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வருகிற 21-ந்தேதி இந்த படத்தைதான் தமிழ், இந்தி என இரண்டு மொழியிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இப்போது, அதே நாளில் மரியான் படமும் ரிலீசாவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தாலே படங்களின் வியாபாரம் பாதிக்கும் என்று நினைக்கிற காலமிது. இந்த நேரத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான், அம்பிகாபதி ஆகிய இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகயிருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பு செய்தியாகியிருக்கிறது.