Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் வடிவேலுவுக்கும் எழுதுகிறார்!

15 ஜூன், 2013 - 15:10 IST
எழுத்தின் அளவு:

இரண்டாவது இன்னிங்சில் என்ட்ரி ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஆறு மாதமாக அடம் பிடித்துக்கொண்டிருந்த வடிவேலு, ஒரு வழியாக கஜபுஜகஜ தெனாலிராமன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பாணியில் வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்பதால் மன்னர் கெட்டப்பில் காணப்படுகிறார் வடிவேலு. சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பிற்கு தலைமுறை கண்ட ஆரூர்தாசும் விசிட் அடித்து வடிவேலுவின் வசன உச்சரிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

இவர் ஏன் வடிவேலு பேசுவதை கவனிக்க வேண்டும் என்கிறீர்களா? இந்த தெனாலிராமன் படத்தை இயக்குவது யுவராஜ் என்றாலும், படத்துக்கு வசனம் எழுதியிருப்பது ஆரூர்தாஸ் தான். எம்.ஜி.ஆர்,. சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற காலஞ்சென்ற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் வசனம் எழுதிய இவர், இப்போது வடிவேலுவுக்கும் எழுதியிருக்கிறார்.

இதனால், வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் டைரக்டர்கள் ஒரு டயலாக் பேப்பரை கொடுத்தால், அவற்றை முழுக்க முழுக்க தனது பாணிக்கே மாற்றி விடும் வடிவேலு, இந்த படத்தைப்பொறுத்தவரை டயலாக்கை மாற்றுவதற்கு ரொம்பவே பயப்படுகிறாராம். அப்படியே மாற்ற வேண்டும் என்று நினைத்தால், வசனகர்த்தா ஆரூர்தாஸிடமே சென்று தனது கருத்தை அவர் முன் வைக்கிறாராம். அவரும், அப்படியா இதோ மாற்றித்தருகிறேன் என்று ஸ்பாட்டிலேயே மாற்று டயலாக்கை சுடச்சுட எழுதி தருகிறாராம். இதனால் என்ன இருந்தாலும் சீனியர் சீனியர் தான் என்று அந்த டயலாக்குகளை வாங்கி பெருமையோடு பேசி நடித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

appu - madurai,இந்தியா
16 ஜூன், 2013 - 13:26 Report Abuse
appu படத்த சீக்கிரம் உடுங்கப்பா...உறுப்படியான காமடி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு....
Rate this:
Shridhar Ragav - chennai,இந்தியா
16 ஜூன், 2013 - 10:47 Report Abuse
Shridhar Ragav வடிவேலு மீண்டும் வரவேண்டும் வெற்றி பெறவேண்டும் மக்கள் காத்திருக்கிறார்கள் வைகை புயல் வர வேண்டும் என்று
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
16 ஜூன், 2013 - 02:15 Report Abuse
Venki Raja நாங்கள் நல்லா சிரித்து ரெம்ப நாள் ஆகிவிட்டது. படம் வெற்றிபெற வாழ்த்துகள் ..........வெங்கட் ஆப்ரிக்கா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in