டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு |
வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி நடித்த படம் அரவான். இந்த படத்தில் தன்சிகா கதாநாயகி, அவரையடுத்து இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தவர் அர்ச்சனா கவி. மலையாள நடிகையான இவர், அரவான் வெற்றி பெற்றால் தமிழில் பேசப்படும் நடிகையாகி விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் வந்தார். ஆனால், அப்படம் ஓடாததால் அதையடுத்து அர்ச்சனா கவியை கண்டுகொள்வாரே இல்லை.
அதனால், அசின், நயன்தாரா, அமலாபால் போன்ற மலையாள நடிகைகளைப்போன்று தனக்கும் தமிழில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பி வந்த அர்ச்சனாகவி பெருத்த ஏமாற்றத்துடன் கேரளாவுக்கே திரும்பினார். அதையடுத்து அண்டை மாநில மொழிப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல், மலையாளப்படங்களில மட்டுமே நடித்து வந்தார். மலையாளத்தில் இவர் நடித்த நீலத்தாமரை, மலவிழுந்தம்மாரே போன்ற படங்கள் வெற்றி பெற்றதால், அதன்பிறகு பிசியான நடிகையாகி விட்டார்.
இந்த நேரத்தில், அங்குள்ள ஒரு தொழிலதிபரை அர்ச்சனா கவி ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தற்போது ஹாட் நியூஸ் வாசிக்கின்றன அங்குள்ள மீடியாக்கள். ஆனால், இந்த செய்தியை மறுக்கிறார் அர்ச்சனாகவி. சினிமாவில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்தால் சுதந்திரம் பறி போய் விடும். கூண்டுக்கிளியாக அகப்பட்டுக்கொண்டு சினிமாவில் எதுவும் செய்ய முடியாது. அதனால் திருமண ஆசையை தள்ளி வைத்துவிட்டேன். இருப்பினும் என்னைப்பற்றி இதுபோன்ற செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார்.