யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது |
சினிமா உலகில் தாறுமாறாக ஹிட் கொடுத்த ஹீரோக்கள் காலியாகிப்போனதும் உண்டு. ஏதோ சுமாரான ஹிட் கொடுத்து சூப்பர் ஹீரோவான நடிகர்களும் உண்டு. இதில் இந்த இரண்டாவது ரகம்தான் நம்ம சிவ கார்த்திகேயன். 3 படத்தில் தனுசின் நண்பராக காமெடி செய்தவரை, பட்ஜெட் ப்ராப்ளம் காரணமாக தனது மெரினா படத்தில் ஹீரோவாக்கினார் பாண்டியராஜ். அப்படம் சுமாரான வெற்றி பெறவே அடுத்து எழில் இயக்கிய மனம் கொத்திப்பறவையில் நடித்த சிவகார்த்திகேயன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் மீடியம் ஹிட் காரணமாக இப்போது 100 படங்களில் நடித்த ஹீரோக்கள் ரேஞ்சுக்கு கோலிவுட்டில் பேசப்படும் நடிகராகி விட்டார்.
அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேல்தட்டிலும் எகிறி குதிச்சி விட வேண்டும் என்று நினைக்கும் அவர், தான் நடிக்கும் படங்களில் மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் தன்னுடன் டூயட் பாடினால்தான் தான் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும் என்று யோசித்து, இப்போது தன்னிடம் யார் கதை சொல்ல வந்தாலும், முன்னதாக, தான் நடிக்க விரும்பும் ஹீரோயினிகளின் பட்டியலை எடுத்துப் போடுகிறாராம். இந்த நடிகைகளில் யாரையாவது ஹீரோயினியாக உங்களால் நடிக்க வைக்க முடியும் என்றால் மட்டும் கதை சொல்லுங்கள் கேட்கிறேன் என்கிறாராம்.
அப்படித்தான் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்திற்கு கதை சொல்லச்சென்றபோதும், சமந்தா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா போன்ற நடிகைகளின் பெயரை முன் வைத்திருக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன், சமந்தாவிடம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்ற சொன்னதும், பதிலே பேசவில்லையாம். ஆனால் ஹன்சிகா மட்டும் ஏ.ஆர்.முருகதாசுக்காக சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.
ஆக,சிவகார்த்திகேயனின் ப்ளானை தெரிந்து கொண்ட கோலிவுட் படாதிபதிகள், அவரிடம் கால்சீட் கேட்பதற்கு முன்பாக, கதாநாயகியை முடிவு செய்து விட்டுத்தான் போக வேண்டும் போலிருக்கிறது என்பதை இபபோது புரிந்து கொண்டுள்ளனர்.