டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு |
தலைப்பை பார்த்துவிட்டு இந்த செய்தி ஏதோ நடிகை சிநேகாவின் வாழ்வில் வந்த காதலர்களை பற்றி சொல்ல போகிறது என்று எண்ணிவிடாதீர்கள். தலைப்புக்கும், நடிகை சிநேகாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. புதிதாக உருவாகும் ஒரு படத்திற்கு தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக்கொண்டிருந்த மசாலா சூதுகள் விடைபெறும் ’நேரம்’ வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு,’’புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்’’- இதுதான் இன்றைய தமிழ்சினிமா ரசிகனின் வேட்கை. அந்த வரிசையில் முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய சங்கதியை செல்லுலாயுடு சபைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகிறது சிநேகாவின் காதலர்கள்.
நட்பு – காதல் – காமம் இவற்றினூடாக பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகஸிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்துகொள்ளும் படம் இது.
ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்துவிடாமல் ‘தன் சுயத்தை’க் காத்துக்கொள்ளப் போராடும் 21ஆம் நூற்றாண்டுப் பெண் சிநேகா. தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்’ என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள். ஆண் – பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்’. மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக்கதையில் இடம்பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ வேடத்தில் நடிக்கவும் கூடும்.
தற்போது படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. அதோடு படத்தின் பாடல்களுக்கான இசைக்கோர்ப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அளவான பொருட்ச்செலவில் தமிழன் டி.வி. நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் தயாரிக்க, முத்துராமலிங்கம் இப்படத்தை இயக்குகிறார். பிரபாகர் இசையமைக்கிறார், நெல்லைபாரதி பாடல்வரிகள் எழுதுகிறார். படத்தின் ஷூட்டிங் இம்மாதம் இறுதியில் துவங்கி, கொடைக்கானல், மதுரை பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட இருக்கின்றன. டிசம்பரில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.