யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது |
கடந்த 3-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் பாலிவுட் நடிகை ஜியாகான். பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக வளர்ந்து வந்த நடிகை என்பதால் இவரது திடீர் தற்கொலை மும்பை சினிமா வட்டாரத்தை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், இறக்கும் முன்பு ஜியாகான் எழுதி வைத்திருந்த 6 பக்க கடிதம் போலீஸ் கைக்கு கிடைத்ததால் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.
அந்த கடிதத்தில், தனது காதலர் சூரஜ் தன்னை கற்பழித்ததாக குறிப்பிட்டிருந்த ஜியாகான், தான் கர்ப்பமானதையடுத்து கட்டாயப்படுத்தி அந்த கருவை அவர் கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையிலும் இந்த கருக்கலைப்பு உறுதி செய்யப்பட்டதால், இப்போது ஜியாகானின் காதலர் சூரஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு நடந்த விசாரணையில், ஜியாகானின் வயிற்றில் குழந்தை உருவாக நான்தான் காரணம் என்று கூறிய சூரஜ், கருவை கட்டாயப்படுத்தி தான் கலைக்க வைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரே குற்றத்தை ஒத்துக்கொண்டதால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்கும் பணியில் மும்பை காவல்துறை ஈடுபட்டுள்ளது.