தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் |
கொக்கி, லீ, மைனா, கும்கி உள்பட பல படங்களை இயக்கியவர் பிரபுசாலமன். தற்போது நான் ஈ பட நாயகன் நானியை நாயகனாக வைத்து தனது புதிய படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் பிரபுசாலமனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு பண மோசடி சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், யாரோ முகம் தெரியாத நபர், நான் பேசுவது போல் எனது குரலில் சில விஐபிக்களிடம் பேசி, என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கிறேன். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறான். மேலும், அப்படி நீங்கள் தர நினைக்கும் பணத்தை என் கையில் தர வேண்டாம். வங்கி கணக்கில் போட்டால் போதும் என்றும் சொல்லியிருககிறான். போனில் கேட்டது என் குரல் போலவே இருந்ததால் அதை நம்பி சிலர் அவன் சொன்ன வங்கிக்கணக்கில் பணமும் போட்டு ஏமாந்திருக்கிறார்கள் என்றார்.
இந்த மோசடி சம்பவத்தை கேள்விப்பட்டதும் பலத்த அதிர்ச்சி அடைந்த பிரபுசாலமன் மதுரவாயல் போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.
இப்போது பிரபுசாலமனின் பெயரை பயன்படுத்தி ஒருவர் மோசடி செய்தது போல், இதற்கு முன்பு, நடிகர் சாந்தனு, தயாரிப்பாளர் காஜாமைதீன், வேதம் புதிது கண்ணன் ஆகியோரின் பெயரையும் தவறாக பயன்படுத்தி ஏற்கனவே சில மோசடி சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.