ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மயக்கம் என்ன படத்தையடுத்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஜார்ஜியா காடுகளில் மாதக்கணக்கில் முகாமிட்டு படமாக்கி வந்தனர். இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் சாதாரண கெட்டப் மட்டுமின்றி பழங்குடியின கெட்டப்பிலும் நடித்துள்ளனர். இதற்காக காடு, மலைப்பகுதிகளில் கடுமையாக கஷ்டப்பட்டு நடித்தனர்.
ஆனால், உடனடியாக தாங்கள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்து விடும் என்று நினைத்தார்கள். ஆனால், செல்வராகவன் படமாச்சே. அத்தனை சீக்கிரத்தில் வெளியிட்டு விடுவாரா என்ன? படப்பிடிப்பை முடித்தவர் கிராபிக்ஸ் வேலைகளை பெரிய அளவில் செய்ய வேண்டுமென்று இப்போது அவதார் படத்துக்கு கிராபிக்ஸ் வேலைகளை செய்த டெக்னீசியன்களை இரண்டாம் உலகத்துக்கும் பயன்படுத்தி வருகிறாராம்.இதனால் படத்தின் குவாலிட்டி ஹாலிவுட் ரேஞ்சுக்கு சென்று கொண்டிருக்கிறதாம்.
அதேசமயம் படத்தின் பட்ஜெட்டும் தயாரிப்பாளருக்கு தலைசுற்றும் அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறதாம். அதாவது, 20 கோடி மட்டுமே ஆர்யா படங்களுக்கான வியாபாரம் என்கிற நிலையிருக்க, இப்படத்திற்கான செலவோ இதுவரை 55 கோடியை தாண்டி விட்டதாம். இருப்பினும், ஆர்யாவின் வியாபாரத்தை மீறி, செலவு செய்து கொண்டிருக்கிறார்களாம். காரணம், செல்வராகவனின் படம் என்ற ஒரே நம்பிக்கையில்தானாம்.
நம்பிக்கையை காப்பாற்றுவாரா செல்வா? பொறுத்திருந்து பார்ப்போம்...