ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தி விட்டு வந்திருக்கிறார் கமல். அங்கு படமான காட்சிகளில் ஆண்ட்ரியா, சேகர் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமாக படமானதாம். அதையடுத்து, இப்போது கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கப்படுகிறது. இதற்காக விஸ்வரூபம்-2 யூனிட் சென்னையில் முகாமிட்டுள்ளது.
இதன்பிறகு புனே சென்று கடைசி கட்ட படப்பிடிப்பை நடத்துகிறார்களாம். ஆனால், இப்போதில் இருந்தே போஸ்ட் புரொடக்சன் வேலைகளையும் இடையிடையே நடத்தி வருகிறார்கள். காரணம், அடுத்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த கமல், இப்போது தனது புதிய பட வேலைகள் இருப்பதால், இந்த ஆண்டு செப்டம்பரில் விஸ்வரூபம்-2வை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார்.
இதன்காரணமாக, படத்தில் நடிப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து டெக்னீசியன்களையும் இப்பட வேலைகள் முடிகிற வரை வேறு வேலைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார் கமல்.