ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் தமன்னா, இலியானா இருவரும் அறிமுகமானார்கள். ஆனால், அதையடுத்து தட்டுத்தடுமாறி சில படங்களில் நடித்து தமிழில் ஒரு நிலையான இடத்தை கைப்பற்றினார் தமன்னா. ஆனால், இலியானாவோ, அடுத்து படம் கிடைக்காததால் தெலுங்குக்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக கொடி நாட்டினர். அப்படி அங்கு பிரபல நடிகை இடத்தை பிடித்த பிறகு மீண்டும் தமிழுக்கு வந்து விஜய்யுடன் நண்பன் படத்தில் ஜோடி சேர்ந்தார்.
ஆனால், அதையடுத்து அவர் கமிட்டான படங்கள் கிடப்பில் போடப்பட்டதால், மீண்டும் தமிழில் இலியானாவுக்கு புதிய வாய்ப்புகள் இல்லை. அதனால் கோலிவுட் தனக்கு ராசியில்லை என்று முடிவு செய்து இந்திக்கு சென்றார் இலியானா. அங்கு நடித்த படங்கள் வெற்றி பெறவே இப்போது தென்னிந்திய சினிமாவில் இருந்து சென்ற அசினைத் தொடர்ந்து இலியானாவும் பாலிவுட்டில் பேசப்படும் நடிகையாகி விட்டார்.
இந்த நேரத்தில் சில படாதிபதிகள் இலியானாவை தெலுங்குக்கு இழுக்கிறார்களாம். ஆனால், அவரோ, இந்தி சினிமா எனக்கு நல்லதொரு இடத்தை தந்திருக்கிறது. அதை தக்க வைத்துக்கொண்டு முழுநேரமும் இந்தி சினிமாவுக்காக செலவு செய்யவே விரும்புகிறேன் என்று கூறி விட்டாராம். இத்தனைக்கும் இலியானாவை அழைத்தவர்கள் அவரை ஆரம்ப காலத்தில் வளர்த்து விட்டவர்களாம். இப்போது மீண்டும் அவரை கூப்பிட்டால் வரமாட்டேன் என்று அடம்பிடிப்பதால் இப்போது இலியானா இடத்துக்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.