ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலுரை அடுத்த காசி கவுண்டன் புதூர். அங்குள்ள வேல்மூர்த்தி பரமசிவன் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவகுமார் தலைமை தாங்கிய இந்த விழாவை, கோவை மடாலயத்தைச் சேர்ந்த குமரகுருபர சுவாமிகள் தொடங்கி வைத்துள்ளார். கணபதி ஹோமம், யாகசாலை பூஜை என பல பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் வழிபாடுகள் நடத்தப்பட்ட இந்த கோவில் விழாவில் திருப்பணிக்குழு மற்றும் காசி கவுண்டன் புதூர் மக்கள் அனைவரும் சேர்ந்து, சூர்யா, கார்த்தி ஆகிய இருவருக்கும் பரிவட்டம் கட்டி சிறப்பு செய்துள்ளனர்.
இதையடுதது அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர்கள், கோவில் வளாகத்திற்குள் மரக்கன்று நட்டார்களாம். மேலும், சொந்த மண்ணுக்கு வந்து உற்றார் உறவினர்களுடன் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மனசுக்கு நிறைவை கொடுத்துள்ளது என்று சூர்யா-கார்த்தி சகோதரர்கள் கூறியுள்ளனர்.