ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா. அதையடுத்து விஜயசேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். புதிய படங்களுக்கான தீவிர வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அவர், விஜயசேதுபதி பல படங்களில் நடிப்பதால் தனக்கு சிபாரிசு செய்யுமாறும் அவரை அன்புத்தொல்லை செய்து வருகிறார்.
இந்த நிலையில், பண்ணையாரும் பத்மினியும் படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். இதனால் நான்தான் அப்படத்திலும் கதாநாயகி என்று கூறி வந்தார் ஐஸ்வர்யா. ஆனால், இப்போது பார்த்தால் சினேகா அப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார். கதைப்படி பண்ணையாராக ஜெயபிரகாஷ் நடிக்க, அவரது டிரைவராக விஜயசேதுபதி நடிக்கிறார். இதில் பண்ணையாரின் மகளாகத்தான் சினேகா கமிட்டாகியிருக்கிறாராம்.
பண்ணையாரின் மகளுக்கும், கார் டிரைவருக்கும் எப்படி காதல் கனெக்சன் ஆகிறது என்பதுதான் முக்கிய கதை என்பதால், கடந்த சில மாதங்களாகவே திறமையான நடிகையாக தேடி வந்தனர். திடீரென்று குடும்பப் பாங்கான கதாநாயகி வேடம் என்பதால் சினேகா நடித்தால் கதைக்கு பொருத்தமாகவும், பலமாகவும் இருக்கும் என்று அவரிடம் கேட்டார்களாம். உடனே சம்மதம் சொல்லி விட்டாராம். ஆக, விஜயசேதுபதிக்கு ஜோடியாக சினேகா நடிப்பது உறுதியாகி விட்டது.
ஆனால், சினேகாவின் திடீர் என்ட்ரி காரணமாக அப்செட்டாகியிருக்கிறார் ஐஸ்வர்யா. இதுவரை தனக்குத்தான் கதாநாயகி வேடம் தருவார்கள் என்று நினைத்தவர் இப்போது தான் செகண்ட் ஹீரோயினி ஆக்கப்பட்டதை எண்ணி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.