ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 8-ந்தேதி சென்னையில் தனது பிறந்த நாள் உதவியாக மாற்றுத்திறனாளிகள் உள்பட 3900 பேருக்கு இலவச உதவிகள் வழங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிட முடிவெடுத்திருந்தார். அதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் ஜெயின் கல்லூரி வளாகத்திற்குள் பிரமாண்டமாக நடந்தன. ஆனால் திடீரென்று அந்த விழாவை ரத்து செய்து விட்டதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் சொல்லபடவில்லை. இதனால் அரசியல் தலையீடு காரணமாகத்தான் அந்த விழா ரத்து செய்யப்படடதாக யூகங்கள் வெளிவந்தன. அதனால் இன்னும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று இப்போது விஜய்யே வாய் திறந்துள்ளார்.
அதாவது, அந்த விழா ரத்து செய்யப்பட்டதற்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விழா நடத்த இருந்த கல்லூரியில்தான் திடீரென்று தடை போட்டுவிட்டனர். காரணம், எனது நலத்திட்ட விழாவை யாரோ, அரசியல் கட்சி விழா போன்று நடத்தப்போவதாக அவர்களுக்கு தப்பான தகவல் கொடுத்திருக்கின்றனர். அதை அவர்களும் நம்பி விட்டனர். அதனால்தான் விழா நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக, 3900 ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உதவிகள் போகவில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் விஜய்.