மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
நடிகை ஸ்ருதி ஹாசன், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது பள்ளி படிப்பும் சென்னையில் தான். இவரது தாயார், சரிகா, வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தந்தை கமல் ஹாசனைப் போலவே, ஸ்ருதிக்கு தமிழ் மீது, ஆர்வம் அதிகம். இதனால், தன் பெயரை, "ஸ்ருதி என, தமிழில், எழுதி, முதுகில் பச்சை குத்தியிருந்தார்.தமிழ் மீது மட்டுமல்லாமல், தன் தந்தையின் சொந்த மாவட்டமான, ராமநாதபுரத்தின் மீதும், அதிக பாசம் வைத்துள்ளார், ஸ்ருதி.
சமீபத்தில், ஒரு விழாவில் பங்கேற்பதற்காக, அங்கு சென்றிருந்த ஸ்ருதியை பார்ப்பதற்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி விட்டனராம். அவர்களை பார்த்து சந்தோஷப்பட்ட ஸ்ருதி, "என் தந்தையின் சொந்த மாவட்டமான, ராமநாதபுரம் தான், எனக்கும் சொந்த மாவட்டம். முதல் முறையாக, இங்கு வந்திருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது என, உணர்ச்சி வசப்பட்டாராம்.